இந்திய பெருங்கடலில் ஜெர்மனி போர்கப்பல்கள்! அலறும் சீனா! இந்தியாவிற்கு அதிகரிக்கும் ஆதரவு!

03 November 2020 அரசியல்
shipcannon.jpg

இந்தியப் பெருங்கடலில் தற்பொழுது, ஜெர்மனி தன்னுடைய போர்கப்பலை ரோந்து பணிக்க அனுப்ப அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது மோதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், இந்தியா தன்னுடைய ஆயுத பலத்தினையும், படை பலத்தினையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சீனாவின் மீது ஏற்கனவே பல நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக, கடுப்பில் இருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் விரக்தியினை வெளிப்படையாக காண்பித்து உள்ளன.

சீனாவினைப் பழி வாங்குவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஸ் ஸிரிங்லா, ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதன்படி, சீனாவின் அத்துமீறல்கள் மற்றும் அராஜகத்தினை கடற்பகுதியில் கட்டுப்படுத்தும் பொருட்டு, ஜெர்மனி இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

அதன்படி, வருகின்ற 2021ம் ஆண்டு முதல் ஜெர்மனியின் போர் கப்பல்கள், இந்தோ பசிபிக் கடற்பகுதியில், தீவிர ரோந்து பணியில் ஈடுபடும் என மிகுவுல் பெர்ஜர் கூறியுள்ளார். இந்த மாத இறுதியில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதனால், சீனா தற்பொழுது அதிருப்தியில் உள்ளது.

HOT NEWS