2020ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதானது, தற்பொழுது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர் நடிகையருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த விருதானது இந்த முறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சிறந்த படமாக இயக்குநர் செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுசிற்கு வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த நடிகையாக ராட்சசி படத்தில் நடித்த நடிகை ஜோதிகாவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதானது, நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்படங்களைப் போன்று, மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கும் இந்த விருதானது அறிவிக்கப்பட்டு உள்ளது.