புவியில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தற்பொழுது வரை, புவிக்கு வெளியில் இருந்து 29 மர்ம குறுஞ்செய்திகள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் விண்வெளி ஆய்வானது, யாரும் எதிர்பார்க்காத வகையில், மாபெரும் வளர்ச்சியினை அடைந்துள்ளது. அந்த ஆய்வில் ரேடியோ சிக்னல்களின் பங்கானது அபரிதமானது. போர்ட்டோ ரிக்கோ நகரில் உள்ள அர்சிபோ ரேடியோ தொலைநோக்கியினைப் பயன்படுத்தி, ரேடியோ ஒலிக்கற்றையினைக் கொண்டாடாடும் விதமாக, அர்சிபோ தகவல்களை, விஞ்ஞானிகள் பிரபஞ்சத்திற்கு அனுப்பி இருந்தனர்.
இந்த தகவல்கள் அனைத்தும், அர்சிபோ வடிவில் அமைந்திருந்தன. அவைகள் அனுப்பி 8 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஏலியன்கள் என யாரும் இல்லை என்று விஞ்ஞானிகள் நம்ப ஆரம்பித்த நிலையில், திடீரென்று ஒரு நாள் யாரும் எதிர்பாராத வகையில், ஒரு தகவல் ஒன்று அவர்களுடைய ரேடியோ தொலைநோக்கியில் பதிவாகியது. இதனை பார்த்த விஞ்ஞானிகள் குழம்பிப் போயினர்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 29க்கும் அதிகமான மர்ம குறுஞ்செய்திகள் அவர்களுடைய தொலைநோக்கியில் பதிவாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், அவைகளில் ஒன்றினைக் கூட, இந்த விஞ்ஞானிகளில் என்னக் கூறப்பட்டு உள்ளது எனக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த செய்திகளால் விஞ்ஞானிகள் சற்றுக் கலக்கத்தில் தான் உள்ளனர். ஒரு வேளை இது எச்சரிக்கை செய்தியாக இருக்கும் பட்சத்தில், புவியின் எதிர்காலம் என்ன ஆகும்?