இங்கிலாந்தில் வருகின்ற 2030ம் ஆண்டின் பொழுது, 30,000 ரோபோக்களை பணியில் அமர்த்த அந்நாட்டு இராணுவம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் இராணுவ அருங்காட்சியகத்தில், அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் பேசுகையில், வருகின்ற 2030ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டின் இராணுவத்தில் 90,000 இராணுவ வீரர்களும், 30,000 அதிநவீன ரோபோக்களும் பயன்படுத்தப்படும் என்றுக் கூறியுள்ளார்.
உலகம் முழுக்க நிச்சயமற்றத் தன்மை நிலவி வருவதாகவும், அதனால் 3ம் உலகப் போர் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் மருந்தின் மீதான பரிசோதனைக்கு, 1000 இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸிற்கு எதிராக, நம் நாட்டு மக்களின் போரானது மதிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். நாட்டிற்காக சேவை செய்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் கௌரவிக்க வேண்டும். அவர்களை மறப்பது ஆபத்தில் முடியும்.
இராணுவத்தின் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தயாராகி வருகின்ற நிலையில், புதிய மற்றும் நீண்ட காலத்திற்கான பட்ஜெட்டும் தயாராகி வருகின்றது. இது அரசிடம் விரைவில சமர்பிக்கப்படும். காலத்திற்கு ஏற்றாற் போல, இராணுவத்திலும் மாற்றங்கள் தேவை. இராணுவத்தினை நவீனமயமாக்கல் போன்ற நீண்ட கால முதலீடுகளுக்கு அரசு நிதி ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.