மொசாம்பிக் நாட்டில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் 50 பேரினைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, அவர்களுடையத் தலையினை தனியாக வெட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில், யாரும் எண்ண முடியாத வேகத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமானது, அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. அங்குள்ள பெண்களை கடத்தி விற்பது, மனிதர்களைக் கடத்தி உடல் பாகங்களை விற்பது, குழந்தைகளை கடத்தி விற்பது, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பது, ஆயுத பேரம், போதைப் பொருட்களை விற்பனை ஆகியவைகளை இந்த தீவிரவாத அமைப்பானது செய்து வருகின்றது.
அந்த அமைப்பானது, மொசாம்பிக் நாட்டில் கிராமங்களை நேற்றுத் தாக்கியுள்ளனர். அங்குள்ள மியூடும்பே மற்றும் மகோம்பியா கிராமத்தில் இருந்த, பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பல பேர் பலியாகி உள்ளனர். பலர் மோசமாகக் காயம் அடைந்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என, பலரையும் சித்திரவதை செய்த தீவிரவாதிகள், அவர்களைத் தலைக்கீழாக கட்டித் தொங்கவிட்டு உள்ளனர்.
பின்னர், அவர்களின் கழுத்தை அறுத்து தலையினை தனியாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர், அந்த உடல்களை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம், உலகளவில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரோன், மதத்தின் பெயரில் மக்களைத் துண்புறுத்துவது சகிக்க முடியாது ஒன்று எனக் கூறியுள்ளார்.