வருகின்ற பொங்கலுக்கு சென்னைக்கு வர இருந்த அமித் ஷாவின் பயணமானது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஜனவரி 14ம் தேதி அன்று, துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கின்றார் எனவும், அதன் பின்னர், அதிமுகவுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் கூட்டணிக் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அந்தத் திட்டமானது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அமித் ஷாவிற்குப் பதிலாக, பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா துக்ளக் பத்திரிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அதிமுகவுடன் கூட்டணிக் குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.