விடைபெற்றார் அனிதா! சூடுபிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு நன்றி!

28 December 2020 சினிமா
anithasampath.jpg

தற்பொழுது நடைபெற்று வருகின்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து, அனிதா சம்பத் விடைபெற்றார்.

70 நாட்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த 3 சீசன்களைக் காட்டிலும், இந்த சீசனில் குறைந்த அளவிலான பரபரப்பே நிலவி வந்த போதிலும், சச்சரவிற்கு பஞ்சம் இல்லாமல் தான் செல்கின்றது. அந்த அளவிற்கு, இந்த ஷோவில் பலரும் வாய் வார்த்தைகளால் சண்டையிட்டு வருகின்றனர். ரியோ ஒரு பக்கம், ஆரி ஒரு பக்கம் என இருக்கின்றனர் என்றால், அனிதா ஒரு பக்கம் என சண்டையிட்டு வந்தனர்.

இந்த வாரம் எப்படியும் ஆரி அல்லது அனிதா வெளியேற்றப்படுவார் எனப் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, அனிதா சம்பத் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இது குறித்து பேசிய கமல், அனிதா சம்பத்தின் கணவரை பார்த்து, உங்களுக்கு புத்தாண்டு பரிசாக அனிதாவினை வழங்குகின்றோம். இந்தப் புத்தாண்டினை கொண்டாடுங்கள் என்றுக் கூறினார்.

அனிதா வெளியேற்றப்பட்டதற்குப் பலரும் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்தாலும், அனிதா ஆர்மியோ அனிதாவிற்கு ஆதரவாக பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS