வருகின்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை, தற்பொழுது அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்குக் காரணமாக, தற்பொழுது ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தத் தேர்வானது ஒரு மணி நேரம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வானது 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதனை பின்னர், 100 மதிப்பெண்களுக்கு மாற்றுவார்கள் எனக் கூறியுள்ளது. ஒரு வேளை, தேர்வு சமயத்தில் இணையம் துண்டானால், நேரடித் தேர்வில் கலந்து கொண்டு எழுதலாம் என்றுக் கூறப்பட்டு உள்ளது.
அதே போல், வாய்மொழித் தேர்வும் இணையத்தின் வாயிலாகவே நடைபெறும் எனவும், இந்தத் தேர்வானது திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும், இணைய வழித் தேர்வின் பொழுது, மாணவர்கள் வேறு யாரையும் அருகில் அமர வைக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.