தமிழக மக்கள் பார்க்கின்ற நம்பர் ஒன் சீரியலாக மாறியுள்ள பாரதி கண்ணம்மாவில் இருந்து, அறிவுமணி விலகி உள்ளார்.
விஜய் டிவியின் சீரியல்கள் பலவும் மக்கள் மத்தியில், மிகவும் பிரசித்திப் பெற்று இருக்கின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட நாடகங்கள் அதீத வரவேற்பினை மட்டுமின்றி, எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி உள்ளன. இந்தப் பாரதி கண்ணம்மா சீரியலானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கும் படி இருப்பதாக, பலரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், இந்த நாடகத்தில் நடித்து வந்த அறிவுமணி என்ற நடிகை, பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடிப்பதற்காக அந்தக் குழுவினருடன் சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில், முல்லை என்றக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அந்தக் கதாபாத்திரத்திற்காக அறிவுமணி சென்றதன் காரணமாக, தற்பொழுது பாரதி கண்ணம்மா நாடகத்தில் இருந்து அவருடைய கதாப்பாத்திரம் நிறுத்தப்பட உள்ளது. இதனை அறிவுமணியே சோகத்துடன் தெரிவித்து உள்ளார். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் உள்ளார்.