ஆஷஸ் நான்காவது போட்டி! ஆஸ்திரேலியா பேட்டிங்!

05 September 2019 விளையாட்டு
ashes4thtest.jpg

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் உள்ள மென்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கடந்தப் போட்டியில், காயம் காரணமாக, பங்குபெறாமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியில், கலந்து கொண்டார்.

தன்னுடைய முதல் இன்னிங்சை சொதப்பலாக ஆரம்பித்தது ஆஸ்திரேலிய அணி. அந்த அணி 28 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்க்கஸ் ஹேரிஸ் 13 ரன்களிலும், டேவிட் வார்னர் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், நிதானமாக ஆடிய மார்னஸ் மற்றும் ஸ்மித் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருவரும் இணைந்து 116 ரன்கள் குவித்தனர். மார்னஸ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் நிலைத்து ஆடி 60 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஹெட் 18 ரன்களுடன், ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணி, 44 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு, 170 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில், பிராட் 2 விக்கெட்டுகளையும், கிரெக் ஓவர்டன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். இதனிடையே மழைக் குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

HOT NEWS