இந்திய வீரர்கள் சீனா மீது நுண்ணலை தாக்குதலா? இந்திய இராணுவம் மறுப்பு!

18 November 2020 அரசியல்
chinaindialadakh.jpg

இந்திய வீரர்கள் மீது, நுண்ணலைக் கருவிகளைக் கொண்டு சீனா தாக்கியதாக வெளியான செய்திகளுக்கு, இந்திய இராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் தொடர்ந்து, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், போர் பதற்றமானது நிலவி வருகின்றது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், பிரச்சனை முடிந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில், சீனாவின் பீஜிங் நகரினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், அமெரிக்காவின் வாஷிங்டன் எக்ஸாமைனருக்கு தகவல் அளித்துள்ளார். அதில், சீனா இந்திய வீரர்கள் மீது மைக்ரோவேவ் அலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஆகஸ்ட் 28ம் தேதி அன்று, இரண்டு மலைக் குன்றுகளை ஆக்கிரமித்துள்ள இந்திய வீரர்கள் மீது, சீன இராணுவமானது நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இதனால், இந்திய வீரர்கள் மலைகளிலேயே மயங்கி விழுந்தனர். ஒரு சிலர் வாந்தி மற்றும் மயக்கத்திற்கு உள்ளாகினர். இந்தத் தாக்குதலானது, சுமார் 15 நிமிடங்கள் நடத்தப்பட்டது என்றுக் கூறியுள்ளார். இது இரு நாடுகளிலும், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய இராணுவத்தின் தரப்பில், புதிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், இது போன்ற எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை எனவும், சீனாவினைச் சேர்ந்தவர்கள், ஊடகங்களின் வாயிலாகத் தொடர்ந்து அவதூறான செய்திகளையும், பொய் புரளிகளையும் பரப்பி வருகின்றது. இதனை சீனாவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருவதாகவும், அவர்கள் கூறியிருப்பது போல, எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளது.

HOT NEWS