நிலாவிற்கு புதிய செயற்கைக்கோளினை அனுப்பியுள்ள சீனா, அங்கிருக்கும் கற்களை புவிக்குக் கொண்டு வந்து ஆய்வு செய்ய உள்ளது.
விண்வெளி ஆய்வில் அமெரிக்காவுடன் போட்டிப் போடும் அளவிற்கு, வளர்ந்துள்ள நாடு என்றால் அது சீனா தான். பொருளாதாரத்திலும் தற்பொழுது போட்டிப் போட்டு வரும் சீன அரசு, தற்பொழுது புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது. நிலவில் பலப் பகுதிகளில் இன்னும், ஆய்வுகள் எதுவும் நடத்தப்படாமல் உள்ளன. அப்பகுதிகளில், இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த சூழலில் ஓசன் ஆஃப் ஸ்ட்ரோம்ஸ் என்றப் பகுதியில் உள்ள பாறைக் கற்களை எடுத்துக் கொண்டு, புவிக்குத் திரும்பும் விண்கலத்தினை இன்று (24-11-2020) காலையில், சீனா விண்ணிற்கு அனுப்பியது. சீனாவின் வென்சாங் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலமானது வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. 1976ம் ஆண்டிற்கு பிறகு, தற்பொழுது நிலவினை ஆய்வு செய்ய, புதிய விண்கலத்தினை அந்நாடு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.