தொடர்ந்து சித்ராவின் தற்கொலையில் பல விஷயங்கள் வெளியான நிலையில், சித்ரா ஏற்கனவே 3 பேரை கதாலித்தார் என அவருடைய வருங்கால மாமனார் தெரிவித்து உள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் மரணமானது, தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமநாத் ஆறு நாட்கள் விசாரணைக்குப் பின், புழல் சிறையில் அடைகப்பட்டார். அவருடைய விசாரணைகளைத் தொடர்ந்து பல விஷயங்கள் சித்ரா மரணத்தில் வெளியாகி வருகின்றன. நடிகை சித்ராவும், ரக்சனுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் அதிகளவில் காதல் காட்சிகள் இருப்பதை, ஹேமநாத் கண்டித்துள்ளார்.
தொடர்ந்து ஹேமநாத்தினை பற்றி குற்றம்சாட்டி வந்த சித்ராவின் தாயார், ஹேமநாத்தின் வற்புறுத்தல் மற்றும் தொந்தரவின் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என, பலமுறைக் கூறிவிட்டார். இந்நிலையில், சித்ரா குறித்து, ஹேமநாத்தின் தந்தை செய்தியாளர்களைச் சந்திக்கையில் விவரித்தார். அவர் பேசுகையில், சித்ரா ஏற்கனவே பலருடன் தொடர்பில் இருந்தவர் எனவும், ஏற்கனவே மூன்று பேரினை அவர் காதலித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
மேலும், என்னுடையக் குடும்பமும், சித்ராவின் குடும்பத்தாரும் இணைந்தே, திருமணத்திற்கான மண்டபத்தினை இரண்டு நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சியுடன் புக் செய்தோம். ஆனால், அதனைப் பற்றி எல்லாம் யாரும் கூறவில்லை. யாரையோ காப்பாற்றுவதற்காக, என்னுடைய மகனை சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவும், ஹேமநாத்தும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டனர் எனவும், அவர்கள் கடைசியாக ஹோட்டல் அறைக்குச் செல்லும் பொழுது பதிவான சிசிடிவிக் காட்சிகளின் போட்டோக்களையும் அவர் வெளியிட்டார். இது தற்பொழுது குற்றம்சாட்டி உள்ளது.