மே மாதம் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்! மீண்டும் தலைவராகும் ராகுல் காந்தி?

22 January 2021 சினிமா
soniagandhi.jpg

மே மாதம், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலானது நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அதற்காகத் தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்தார். இதன் காரணமாகவே, சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வந்தார். தற்பொழுது சோனியா காந்தியின் உடல்நிலை நலிவடைந்து வருகின்றது.

அதன் காரணமாகவே, புதியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியானது நடைபெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பலத் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் தலைமை என்ன முடிவு எடுக்கும் என, யாருக்கும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், ஜனவரி 22ம் தேதி அன்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது.

இந்த சூழலில், வருகின்ற மே மாதம் அக்கட்சியின் புதியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக உட்கட்சித் தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல்கள் முடிந்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலை வைத்துக் கொள்ளலாம் என, சோனியாகாந்தி கூறியதாகவும் அதனைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

இந்தத் தேர்தலில், ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், அவருக்கு எதிராக யாரும் போட்டியிடமாட்டார்கள். அவரே மீண்டும் தலைவராகும் வாய்ப்புகள் உள்ளன என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

HOT NEWS