சீனாவில் மனிதர்கள் மீது விஷ பரிட்சை! தடுப்பூசி பரிசோதனையால் பீதி!

28 September 2020 அரசியல்
vaccination1.jpg

சீனாவில் உள்ள மனிதர்கள் மீது, கொரோனா தடுப்பூசியானது வலுக்கட்டாயமாக பரிசோதிக்கப்படுவதாக, புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் ஊஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்தது. தற்பொழுது வரை இந்த வைரஸால் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், ரஷ்யாவினைத் தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை.

இந்த சூழ்நிலையில், சீனாவில் இந்த வைரஸிற்காக 11 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவைகள் தற்பொழுது சோதனை செய்யப்பட்டு உள்ளன. இந்த சோதனையில், தொடர்ந்து பலவித திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. பொதுவாக, தடுப்பூசி பரிசோதனைக்கு தன்னார்வலர்கள் மட்டுமேப் பயன்படுத்தப்பட்டு வந்தனர். அவர்கள் மீது தான், இந்த மருந்துகளைப் பரிசோதிக்க வேண்டும். ஆனால், சீனாவில் தற்பொழுது அதிலும் அத்துமீறல் உருவாகி உள்ளது.

சீனாவில் தன்னார்வலர்கள் மீது மட்டுமின்றி, அரசு தேர்வு செய்யும் நபர்கள் மீதும், வலுக்கட்டாயமாக இந்த தடுப்பூசி மருந்துகள் சோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது இந்த மருந்துகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த செய்திகளுக்கு தற்பொழுது சீன அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து சீன அரசு தெரிவிக்கையில், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவைகளை யாரும் நம்ப வேண்டாம். அனைத்தும் பாதுகாப்பான முறையில் தான் நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்து உள்ளது.

HOT NEWS