சிஎஸ்கேயின் மாஸ்டர் பிளான்! தோனி ஏன் மூத்த வீரர்களை வைத்துள்ளார்?

25 January 2021 அரசியல்
csk2.jpg

வருகின்ற ஐபிஎல் போட்டிகளானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மெக்ஸ்வெல்லை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தகுதிச் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. இதனால், பலக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. வயது முதிர்ந்த வீரர்களை வைத்துக் கொண்டு, தோனி ஏன் இப்படி செய்கின்றார், இளைஞர்களுக்கு ஏன் அவர் வாய்ப்பு தருவது இல்லை என்பதுப் போல, பல விமர்சனங்களை ரசிகர்களும், விமர்சகர்களும் முன் வைத்தனர்.

இந்த சூழலில், தற்பொழுது தங்களுடைய அணிகளில் இருந்து தேவையற்ற வீரர்களை விடுவித்து, ஐபிஎல் அணிகள் புதிய வீரர்களை வாங்கும் முடிவில் இறங்கி உள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது, தற்பொழுது ராபின் உத்தப்பாவினை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், கிளென் மெக்ஸ்வெல் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டவர்களை வாங்க, சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

ரெய்னாவினைத் தவிர்த்து, மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாட, வீரர்கள் இல்லாதக் காரணத்தால், மெக்ஸ்வெல்லையும், ஓப்பனிங் வீரர் வாட்சன் ஓய்வு பெற்றதை அடுத்து, அவர் இடத்தினை நிரப்புவதற்கு, ஸ்மித்தையும் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு வீரர்களுமே ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி, பந்து வீசவும் செய்வார்கள். இரண்டு பேரும் ஆல்ரவுண்டர் என்பதால், அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது சிஎஸ்கே. இந்த செய்தியால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

HOT NEWS