ஈஸ்வரன் திரைவிமர்சனம்!

15 January 2021 சினிமா
eeswaranreview.jpg

பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் சிம்பு இயக்கத்தில் உருவாகி வெளியாகி இருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். இந்தப் படமானது, தற்பொழுது திரையறங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்தப்ப டத்தில் சிம்பு, பாரதிராஜா, பால சரவணன், ஹரீஸ் உத்தமன், சரவணன், மனோஜ் பாரதிராஜா, காளி வெங்கட், நந்திதா, நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள். பெரும் பட்டாளமே நடித்துள்ளதை நீங்கள் கவனிக்க இயலும். இந்தப் படத்தினை சுசீந்திரன் இயக்கி உள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்திற்கு வருவோம்.

ஒரு சட்டியில், தயிர் சாதம், சாம்பார் சாதம், பிரியாணி, கூழ், களி என அனைத்தையும் இட்டு உண்டால் எப்படி இருக்கும், அப்படித் தான் இருக்கின்றது ஈஸ்வரன். குடும்ப செண்டிமெண்ட், சொத்துப் பிரச்சனை, திடீர் சண்டைகள், துரோகங்கள், காதல், நகைச்சுவை, நட்பு என அனைத்தையும் இந்தப் படத்தில் கொண்டு வர நினைத்து இருப்பதை, படம் பார்த்தவர்களால் உணர முடியும். இந்தப் படத்திலும், சிம்புவின் விரல் வித்தையினை தெளிவாகக் காண இயலும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, சிம்பு படம் வந்துள்ளது நாம் அனைவரும் சென்று பார்ப்போம் என்று நினைத்தால், படம் பார்த்த பிறகு ஏன்டா இந்தப் படம் வந்துள்ளது என்றே நமக்குத் தோன்றுகின்றது. படத்தின் ஒபனிங் சாங் நன்றாகவே வந்துள்ளது. மற்றப் படி, படத்தின் பாடல்கள் பெருமளவில் கவனத்தினை ஈர்க்கவில்லை. பாரதிராஜாவின் நடிப்பு பாராட்டுதலுக்குரிய ஒன்று. ஜோதிடராக வரும் காளி வெங்கட், பாரதிராஜாவின் குடும்பத்தில் ஒரு உயிர் பலி ஏற்படும் என்கின்றார்.

அவர் கூறினால் அது கண்டிப்பாக நடைபெறும். அதனை எவ்வாறு சிம்பு தடுக்கின்றார். உயிர் பலி ஏற்பட்டதா, பாரதிராஜாவிற்கு எதிராக யார் சதி செய்கின்றார்கள், சிம்புவிற்கும் பாரதிராஜாவிற்கும் என்ன சம்பந்தம் என, படத்தின் கதை நீள்கின்றது. நிதி அகர்வால் நம்மை கவர்கின்றார். நந்திதாவிற்கு குறைவானக் காட்சிகளே படத்தில் உள்ளன. உண்மையினைக் கூற வேண்டும் என்றால், மாநாடு படத்திற்கு முன்னாள் அவசர அவசரமாக வெளியிட்டதற்கு முக்கியக் காரணமாக, அப்படத்தின் மதிப்பினைக் கூட்டுவதற்கோ என்றேத் தோன்றுகின்றது.

இந்தப் படத்தில் பல நல்லக் காட்சிகள் இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் சுசீந்திரன். இந்தப் படத்தினைப் பார்த்த பின்னர் நமக்கு ஒன்று தோன்றுகின்றது. எப்பொழுதும் பிரச்சனை என்றால், ஈஸ்வரா என்னை காப்பாற்று என்றுக் கூறுவோம். ஆனால், இந்தப் படத்தினை பார்த்த பிறகு ஈஸ்வரன் படத்திடம் இருந்து காப்பாத்து என்றேத் தோன்றுகின்றது.

ரேட்டிங் 1.6/5

HOT NEWS