தமிழக கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டது! ரஜினிக்கு எந்த சின்னம்?

15 December 2020 அரசியல்
election-comission.jpg

தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தற்பொழுது தேர்தல் சின்னமானது ஒதுக்கப்பட்டு வருகின்றது. அதில், ஒரு சிலக் கட்சிகளுக்கு சின்னங்கள் தற்பொழுது ஒதுக்கப்பட்டு உள்ளன.

வருகின்ற 2021ம் ஆண்டு, தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில், தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை தேர்தலில், எப்படியாவது பாஜக நினைக்கும் கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஒரே மூச்சாக செயல்பட்டு வருகின்றது. அதே போல், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்து வருகின்ற திமுக, இந்த முறை ஆட்சியினைப் பிடித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்டு இருந்த சலசலப்பானது தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது. எடப்பாடி தலைமையில் இந்தத் தேர்தலினை, அந்தக் கட்சியானது சந்திக்க உள்ளது. திமுகவின் உதய சூரியன், அதிமுகவின் இரட்டை இலை, பாமகவின் மாம்பழம், தேமுதிவின் முரசு சின்னம் தவிர்த்து மற்றப் புதிய கட்சிகளுக்கு சின்னங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் தற்பொழுது சின்னங்களை ஒதுக்கி வருகின்றது.

ரஜினியின் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ ரிக்சா சின்னமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு அதே விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதே போல், டிடிவி தினகரனின் அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற சிறியக் கட்சிகளுக்கு என்னச் சின்னம் ஒதுக்கப்படும் என்பது குறித்தத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS