யானையினை கொளுத்திய மனித மிருகம்! கொந்தளித்த கமல்ஹாசன்!

23 January 2021 அரசியல்
elephantfire.jpg

நீலகிரி மாவட்டத்தில் யானையினை தீ வைத்து கொன்ற 2 பேருக்கு, 15 நாட்கள் சிறைக் காவல் விதித்துள்ளது நீதிமன்றம்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி மாவனல்லா பகுதியில், நள்ளிரவில் யானை ஒன்று வீட்டருகே வந்தது. அதனை விரட்டிய இருவர் பின்னர், அந்த யானை சென்றதும் அதன் மீது, தீயினை வீசினர். அதனால், தீப்பிடித்த அந்த யானையின் உடல், கருகியதன் காரணமாக அந்த யானை உயிரிழந்தது. இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, யானையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் மற்றும் ரோமன் டீன் ஆகியோரை 15 நாட்களுக்கு, சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த செயலுக்கு கமல்ஹாசன் தன்னுடையக் கடுமையானக் கண்டனத்தினை பதிவிட்டு உள்ளார்.

HOT NEWS