உலகின் மாபெரும் 2வது பணக்காரராக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன்மஸ்க் உருவாகி உள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனமானது, 2020ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலினை வெளியிட்டு உள்ளது. அதில் முதலிடத்தில், அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பிசோஸ் தொடர்ந்து உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் எலன் மஸ்க் இருக்கின்றார். அவருடைய சொத்து மதிப்பானது இந்திய அளவீட்டில், சுமார் 94 லட்சம் கோடியாக உள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸினை விட அதிகமாகும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினை ஆரம்பித்ததில் இருந்து, எலன் மஸ்க்கின் மதிப்பானது நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.