இங்கிலாந்து நாட்டில், வருகின்ற 2030ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் ஆகியவைகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் தடை செய்யப்படும் என, அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய போரீஸ் ஜான்சன், வருங்காலத்தினை வளமாக்கவும், இயற்கையினைப் பாதுகாக்கும் பொருட்டும், இங்கிலாந்து அரசுப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த சூழலில், தற்பொழுது புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகின்ற 2030ம் ஆண்டு வரையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகின்றது. 2030ம் ஆண்டு முதல், இவை தடை செய்யப்பட்டு விடும்.
இவ்வாறு செய்வதன், சுற்றுச்சூழல் மாசினை நம்மால் குறைக்க இயலும். இதன் மூலம், மின்சார வாகனங்களுக்கான திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். டி கார்பனைஸ் அதாவது கரியமில வாயு குறைந்த நாடாக, ஜி-7 நாடுகளில் இங்கிலாந்து திகழும் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது.