DTH சேவையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி! 20 ஆண்டுகளுக்கு உரிமம்!

24 December 2020 தொழில்நுட்பம்
dthdish.jpg

இந்தியாவின் டிடிஹெச் சேவையில் 100% அந்நிய முதலீட்டிற்கு, மத்திய அரசு தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் தற்பொழுது நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தற்பொழுது அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவை தங்களுடைய சேவைகளை ஓடிடி தளத்தில் வழங்கி வருகின்றன. தற்பொழுது டிடிஎச் சேவையிலும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

அவர் பேசுகையில், டிடிஎச் சேவைகளுக்காக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு, மத்திய அரசானது தற்பொழுது ஒப்புதல் வழங்கியுள்ளது என்றுக் கூறியுள்ளார். இதனால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு 100% அந்நிய முதலீடானது, டிடிஎச் சேவையில் அனுமதிக்கப்படுகின்றது எனவும், மேலும் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு உரிமமானது புதுப்பிக்க வழிவகை செய்யப்படும் என்றுக் கூறியுள்ளார். இதனால், இனி, சன் டைரக்ட், டாடா ஸ்கை, உள்ளிட்டவைகளைப் போல, வெளிநாட்டு நிறுவனங்களான ஹெச்பிஓ, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்டவைகளின் சேவைகளும் இந்தியாவில் விரைவில் காலடி எடுத்து வைக்கும் எனக் கூறப்படுகின்றது.

HOT NEWS