மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ஹிருதிக் ரோஷன் நடிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தினை லலித் தயாரித்து உள்ளார். இந்தப் படமானது தற்பொழுது உலகம் முழுவதும் வெளியாகி, பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்தப் படமும் கடந்த 3 நாட்களில் 100 கோடியினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்திற்கு 50% பார்வையாளர்களே திரையறங்குகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வசூலின் வேகம் மட்டும் குறையவே இல்லை. இந்த நிலையில், இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, இதனை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணியானது நடைபெற்று வருகின்றது. இதனையும், லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படுகின்றது. இதில், விஜய்க்கு பதில் கதாநாயகனாக, ஹிருதிக் ரோஷன் நடிக்கப் போவதாக, சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
பவானி கதாபாத்திரத்தில், வெறித்தனமான வில்லனாக நடைபெற்று இருந்த விஜய் சேதுபதி, ஹிந்தியிலும் அவரே நடிப்பார் என்று கூறப்படுகின்றது. அது உண்மையென்றால், கட்டாயம் விஜய் சேதுபதி விரைவில் பாலிவுட்டில் நடிப்பார் என்பது உறுதியாகி உள்ளது. இதனால், விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.