இவ்வளவு தங்கம் எங்கிருந்து வந்திருக்கும்? விஞ்ஞானிகளிடையே கடும் ஆய்வு மோதல்!

14 October 2020 அமானுஷ்யம்
milkywayspace.jpg

நாம் அனைவரும் பயன்படுத்துகின்ற தங்கம் எங்கிருந்து வந்திருக்கும் என, விஞ்ஞானிகள் தற்பொழுது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தப் பிரபஞ்சமானது, விசித்திரங்களின் இல்லமாக உள்ளது. நாம் வாழ்கின்ற பிரபஞ்சத்தில் இல்லாத அற்புதங்களேக் கிடையாது. அந்த அளவிற்கு பல விஷயங்கள் இதில் பொதிந்துள்ளன. அதனை தற்பொழுது விஞ்ஞானிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து கண்டறிந்து வருகின்றனர். அதில், தற்பொழுது புதியக் கண்டுபிடிப்பு ஒன்று தான் பெரிய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தங்கமானது, சாதாராண பொருளாகப் பார்க்கப்படுவது கிடையாது. அதன் மதிப்பும் மிகவும் அதிகமான ஒன்றாகும். இந்த தங்கத்தினை புவியில் இருந்து தோண்டி எடுத்து, அதனை சுத்தம் செய்து விற்கின்றனர். இந்த தங்கமானது, வேதி வினைகளின் மூலம் உருவாகின்றது. 79 புரோட்டான் மற்றும் 118 நியூட்ரான் ஆகியவை, ஒரே அணுவின் கருவில் இணையும் பட்சத்தில் தங்கமானது உருவாகின்றது. இவ்வாறு தான் இயற்கையாகவும், செயற்கையாகவும் தங்கமானது உருவாக்கப்படுகின்றது.

இந்த தங்கமானது, தற்பொழுது பிரபஞ்சத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி விவரிக்கின்ற இங்கிலாந்து நாட்டின் ஹெர்த்போர்ட்ஸ்பியர் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் சியாக்கி கோபாயாசி, இந்தத் தங்கமானது பிரபஞ்சத்தில் உருவாக வாய்ப்பே இல்லை. ஒருவேளை அது உருவாக வேண்டும் என்றால், நட்சத்திர நிலையில் இருந்து சூப்பர்நோவா நிலைக்குச் செல்லும் அந்த செயலில் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

அப்பொழுது தான், கணக்கிலடங்காத நியூட்ரானும், புரோட்டானும் வெளிப்படுகின்றன. அவ்வாறு இவைகள் மூலம் வந்தாலும், எவ்வளவு தங்கம் உருவாகிவிடும் என்பதுக் கேள்விக்குறியான ஒன்று தான் என விவரிக்கின்றார். பல கிரகங்களில் கணக்கிலடங்காத அளவிற்கு தங்கங்கள் உள்ளன. இன்னும் சிலக் கிரகங்களில் வைர மழை தினமும் பெய்கின்றன. அவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, மனித இனம் இன்னும் விண்வெளி ஆய்வில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

HOT NEWS