யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா?

23 March 2020 உடல்நலம்
sleepingtime.jpg

தூங்காத உயிரினம் என்பது கிடையாது. தூக்கம் இல்லாமல், யாரும் உயிர் வாழ முடியாது என்பது தான், இயற்கையின் விதி. ஆனால், தற்பொழுது உள்ள வேகமான உலகத்தில் பலரும் தூக்கத்தினை மறந்து, வேலை வேலை எனச் சென்று, வாழ்க்கையினைத் தொலைக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என, ஒரு பட்டியலே வெளியாகி உள்ளது அதன்படி, பிறந்த்து முதல் மூன்று மாதம் வரை, ஒவ்வொரு குழந்தையும் தினமும் 14 முதல் 17 மணி நேரம் வரை, உறங்க வேண்டும்.

நான்கு மாதம் முதல் 11 மாதம் வரை 12 முதல் 15 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கத்தினை, தினமும் பெற வேண்டும். ஒன்று முதல் இரண்டு வயதுடையக் குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் நன்றாக தினமும் உறங்க வேண்டும். அதே போல், மூன்று முதல் 5 வயதுடையக் குழந்தைகள் தினமும் 10 முதல் 13 மணி நேரம் உறங்குவது நல்லது. அப்படி உறங்கினால், உடலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

ஆறு முதல் 13 வயதுடையக் குழந்தைகள், தினமும் 9 முதல் 11 மணி நேரம் உறங்க வேண்டும். 14 முதல் 17 வயது என்பது, பருவத்தினை அடையும் வயதாகும். அப்பொழுது, 8 முதல் 10 மணி நேரம் தூங்குவது வளர்சிதை மாற்றத்திற்கு நல்லதொரு அமைப்பாக இருக்கும். 18 முதல் 64 வயதுடையவர்கள், ஏழு முதல் ஒன்பது மணி நேரமாவது தினமும் தூங்குவது நல்லது. 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள், தினமும் 7 முதல் எட்டு மணி நேரம் உறங்குவது நல்லது.

HOT NEWS