மனைவியின் மனதை எப்படி வெல்வது? சில டிப்ஸ்!

19 April 2020 உடல்நலம்
lovewife.jpg

அனைத்து ஆண்களுக்கும் சவாலான விஷயம் என்னவென்றால், தாலி கட்டிய மனைவியின் வாயால், நீங்க தான் எனக்கு எல்லாம் எனக் கூற வைப்பது. அது சாதாரண விஷயமே அல்ல. பெண்களுக்கு கையில் உள்ள கணவனைக் காட்டிலும், பக்கத்து வீட்டில் இருப்பவர்களே சிறந்தவர்கள். தன்னுடையக் கணவன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும், பக்கத்தில் இருப்பவர்கள், அண்ணன் அல்லது தம்பி போன்றவர்களே திறமைசாலிகளாகப் பார்ப்பர். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, ஆணின் தொடர்பு தான்.

ஆம், தன்னுடைய மனைவியினை எப்படி அணுகுவது எனப் பல ஆண்களுக்கும் தெரியாது. பலர், தான் ஒரு ஆண் என்ற கர்வத்தில் பெண்ணிடம் நடந்து கொள்வதால், அவர் மீது ஒருவித வெறுப்பும், அதிக எதிர்பார்ப்பும் உண்டாகின்றது. உங்கள் மனைவியினை கீழ்காணும் முறைகளில் தொடர்பு கொண்டால், கண்டிப்பாக அவருடைய மனதை எளிதாக வெல்ல இயலும்.

சிரித்துப் பேசுதல்

உங்கள் மனைவி உங்களை எவ்வளவுக் கேவலப்படுத்தினாலும், அவர்களிடம் நீங்கள் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே பதில் கூறுங்கள். இதற்கு உங்களுக்கு மிகவும் அதிகமாகத் தேவைப்படுவது பொறுமை தான். பொறுத்தார் மனைவியின் மனதை ஆள்வார். இது மிகவும் கடினமான விஷயம் தான். காரணம், அவர் தான் நினைத்தபடி எல்லாம் பேசுவார். நீங்கள் அதனை கேட்டு, அதற்குப் பொறுமையாகப் பதில் கூற வேண்டும். இதில் நீங்கள் வென்றுவிட்டால் போதும். மற்றவைகள் எல்லாம் ஊறுகாய் மாதிரி.

மனைவியை ரசித்தல்

உங்கள் மனைவியின் அழகை ரசியுங்கள். அவர் உடயினை கவனியுங்கள். அவருக்கு எது அழகாக இருக்கும் என கூறுங்கள். அவர் இதை அணிந்தால், இன்னும் அழகாக இருக்கும் என்றுக் கூறுங்கள். அதனை அறிவுரையாக இல்லாமல், அக்கறையாக கூறுங்கள். ஒரு முறை அவர் உங்களை சட்டை செய்யமாட்டார். இரண்டாம் முறை நீங்கள் சொல்வது பற்றி யோசிப்பார். மூன்றாம் முறை, நீங்கள் சொல்வது போல் உடை அணிவார்.

வெளியில் செல்லுதல்

வெளியில் அவருடன் செல்லுங்கள். நடைபயிற்சி, அல்லது கோயிலுக்குச் செல்லுதல், சினிமா செல்லுதல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குச் செல்லுதல் முதலியவைகளுக்கு உங்கள் மனைவியுடன், அவருடையக் கையைப் பிடித்துக் கொண்டு செல்லுங்கள். அது அவரை உங்களுடன் நெருக்கமாக வைத்துக் கொள்ள உதவும்.

பணம்

முடிந்த வரை, அதிகம் சம்பாதியுங்கள். பணம் இருந்தால், அவர்களுடையத் தேவைகளை உங்களால் சமாளிக்க முடியும். உங்கள் மனைவியின் தேவைகளுக்காக, தனியாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கானப் பணத்தினை தந்துவிடுங்கள். அவர், கேட்காமலேயே கொடுத்தால், அவர் மனம் குளிர்ந்து விடும்.

பரிசுகள் அளித்தல்

உங்கள் மனைவியின் பிறந்த நாள், உங்களுடையத் திருமண நாள், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட சுப நாட்களின் பொழுது, உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அவர் விரும்பியப் பொருட்கள், நகைகள், ஆடைகள் முதலியவைகளை வாங்கித் தாருங்கள். அது அவரை, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

உடலுறவு

பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனையாக இருப்பது தாம்பத்திய உறவும் பண வரவுமே. இந்த இரண்டு விஷயத்திலும் ஒரு பெண்ணைத் திருப்தி படுத்திவிட்டால் போதும். பின்னர், உங்கள் மனைவி உங்கள் காலை சுற்றி வரும் நாய்குட்டி போல மாறிவிடுவார்.

இடைவெளி

அவர் டிவி பார்க்கும் பொழுது, அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது. அவர் கோபமாக இருக்கும் பொழுது, அவரை சமாதானம் செய்ய முயல்வது. அவருடைய உடல்நிலை சரியில்லாத பொழுது, உடனிருந்து கவனித்துக் கொள்வது உள்ளிட்ட வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

HOT NEWS