தமிழக அளவில் பிரசித்திப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், தற்பொழுது விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்து உள்ளார்.
இன்னும் ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தன்னுடைய 57வது வயதிலேயே ஐஏஎஸ் சகாயம் தன்னுடைய விருப்ப ஓய்விற்காக விண்ணப்பித்து உள்ளார். தற்பொழுது தமிழக அறிவியல் நகரின் துணை சேர்மனாக இருந்து வருகின்ற நிலையில், அவருக்கு சரியான அங்கீகாரம் வழங்கவில்லை எனவும், தகுந்த பொறுப்பு வழங்காததால் இந்த முடிவிற்கு அவர் வந்துள்ளார் எனவும் பலரும் தங்களுடையக் கருத்துக்களை முன் வைத்த வண்ணம் உள்ளனர்.
அவர் மதுரையில் உள்ள பிஆர்பி கிரானைட் ஊழல் மற்றும் முறைகேடு குறித்து, விரிவான விசாரணை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதால், அவரை தொடர்ந்து இடமாற்றத்திற்கு உள்ளாக்கிய அரசு, அவரை தற்பொழுது பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத பணியில் அமர்த்தி உள்ளது. விருப்ப ஓய்விற்கு சகாயம் விண்ணப்பித்து உள்ளதால், இன்னும் 2 மாதங்களில் அவர் ஓய்வு பெறுகின்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.