சசிகலா உடல்நலம் சீராக உள்ளது! இளவரசிக்கு கொரோனா தொற்று!

23 January 2021 அரசியல்
ilavarasicovid19.jpg

சிறையில் சசிகலாவுடன் உடனிருந்த இளவரசிக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு, திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து, அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையில், சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சையினை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அத்துடன், அவருக்கு நுரையீரல் நிம்மோனியா நோயும் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருக்கின்ற காரணத்தால், அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, இளவரசிக்கும் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. அதில், இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

HOT NEWS