ஆன்டி ஏவுகணை சோதனை வெற்றி! கதற ஆரம்பித்த சீனா! லடாக்கில் அதிகரிக்கும் வலிமை!

16 November 2020 அரசியல்
missilelaunch.jpg

இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பு நடத்திய சோதனையில், இந்தியா தயாரித்துள்ள ஆன்டி ஏவுகணையானது, வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓடிசா மாநிலம் பாலேசர் தீவில் இருந்து, டிஆர்டிஓ அமைப்பானது, ஏவுகணை சோதனையினை நடத்தியது. இந்த சோதனையில், வான்வெளியில் உள்ள இலக்கினைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் எதிர்வினை (ஆன்டிபேலஸ்டிக்) ஏவுகணையினை சோதித்தது. இந்த சோதனையில், இந்தியா தயாரித்துள்ள ஏவுகணையானது வெற்றிகரமாக இலக்கினைத் தாக்கியுள்ளது. இதனால், இந்த ஏவுகணையானது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக 30 கிலோ மீட்டர் தூரத்தில், இந்த ஏவுகணைக்குரிய இலக்கானது வைக்கப்பட்டது. அதனை மணிக்கு சுமார் 5,803 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணையானது எட்டு முறைக்கும் மேலாக சோதிக்கப்பட்டு விட்டது. இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றி பெற்றதால், இது தற்பொழுது இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணையினை, முப்படைகளிலும் பயன்படுத்த இயலும் என்பது, கூடுதல் சிறப்பாகும்.

இந்த சோதனை வெற்றி பெற்று உள்ளதால், இந்த ஏவுகணையானது, அவசரமாக லடாக் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இராணுவ மையத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இது தற்பொழுது சீனாவிற்குத் தலைவலியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS