மதர்போர்டு தயாரிப்பில் மும்முரம் காட்டும் இந்தியா! 2021ல் 8 லட்சம் கோடி வர்த்தகம் என கணிப்பு!

06 December 2020 தொழில்நுட்பம்
motherboard.jpg

இந்தியாவில் வருகின்ற 2021 முதல் 2026ம் ஆண்டுகளுக்குள் மதர்போர்டு தயாரிப்பானது, 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

மொபைல் டிவைஸ் இன்டஸ்ட்ரீ பாடி மற்றும் ஈஒய் அமைப்பு நடத்திய கணிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் தேவையானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. கிராம மக்கள் முதல், நகரத்து மக்கள் வரை அனைவருமே, தற்பொழுது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் என தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் அந்தப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

தொடர்ந்து சீனாவில் இருந்து இந்திய நாட்டில், பல காலங்களுக்கு இறக்குமதியினை மட்டுமே நம்பி இருக்க முடியாது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், தற்பொழுது பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதால், விரைவில் சீனாவில் இருந்து இற்றகுமதி செய்வது தடை செய்யப்படலாம் என்றப் பிரச்சனையும் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே தொழிற்சாலைகளை அமைத்து, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் பணிகளானது நடைபெற்று வருகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தான், இந்த கணிப்பினை ஈஒய் உள்ளிட்ட அமைப்புகள் செய்துள்ளன. தற்பொழுது மதர்போர்டுகளின் உற்பத்தியானது அதிகரிக்க ஆரம்பித்து உள்ளதால், இதன் சந்தை மதிப்பானது வருகின்ற 2021ம் ஆண்டில் இருந்து 2026ம் ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS