ஐந்து இடங்களில் மட்டும் ஐபிஎல்லை நடத்தத் திட்டம்? ரசிகர்கள் அதிர்ச்சி?

13 February 2021 விளையாட்டு
dhoniform.jpg

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இந்த ஆண்டு 5 இடங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த, ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற 18ம் தேதி அன்று, ஐபிஎல் ஏலமானது சென்னையில் நடைபெற உள்ளது. இதில், 292 வீரர்கள் ஏலத்தில் வருகின்றனர். மொத்தம் 61 வீரர்களை ஐபிஎல் அணிகளால் ஏலத்தில் எடுக்க இயலும். 14வது ஐபிஎல் சீசனானது இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இதில், புதிய அணிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இடம் பெறவில்லை.

தொடர்ந்து எட்டு அணிகளே, இந்த ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, இந்தியா முழுவதற்கும் சேர்த்து மொத்தம் 5 இடங்களில் மட்டும், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அகமதாபாத் நகரில் இந்தப் போட்டிகளை நடத்தும் முடிவினை நிர்வாகத்தினர் எடுத்துள்ளனர்.

HOT NEWS