தலைமை விஞ்ஞானி மொசேன் பக்ரிசோத் எவ்வாறு கொல்லப்பட்டு உள்ளார் என, ஈரான் நாடானது பரபரப்புத் தகவலை வெளியிட்டு உள்ளது.
ஈரான் நாட்டின் தலைமை விஞ்ஞானியான மொசேன் பக்ரிசோத், கடந்த 27ம் தேதி அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து காரில் சென்ற பொழுது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடையக் கொலைக்கு பல நாடுகளும் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்தன. இது குறித்து பேசிய ஈரான் அதிபர், இதற்கு இஸ்ரேல் தான் முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.
இந்த சூழலில், அவர் எவ்வாறுக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என, ஈரான் நாட்டு புரட்சிப் படையின் துணைத் தளபதி அலி பதாவி கூறியுள்ளார். அவர் கூறுகையில், விஞ்ஞானி மொசேன் பக்ரிசோத் சாலையில் காரினை ஓட்டிக் கொண்டு சென்ற பொழுது, செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்பட்ட துப்பாகியினால், சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் எனவும் கூறியுள்ளார். இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.