சவுதிக்கு 200 படைகளை பாதுகாப்பிற்காக அமெரிக்கா அனுப்புகிறது!

27 September 2019 தொழில்நுட்பம்
sivan.jpg

விரைவில் இந்தியாவின் சார்பில், விண்வெளிக்கு வீரர்களை இந்தியா அனுப்பும் என, இஸ்ரோ தலைவர் திரு. கே. சிவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ளப் பேட்டியில், நாங்கள் (இஸ்ரோ) விரிவான எதிர்காலத்திற்கான திட்டத்தினை உருவாக்கி வருகிறோம்.

சந்திராயன் 2வின் ஆர்ப்பிட்டர், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும், விக்ரம் லேண்டரில் இருந்து, சிக்னல் கிடைக்கவில்லை. ககன்யான் திட்டம் மிகச் சிறப்பானத் திட்டம் ஆகும். இதனைச் செயல்படுத்த இஸ்ரோ நிறுவனம், மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.

வரும் 2022ம் ஆண்டுக்குள், இந்தத் திட்டத்தினை இஸ்ரோ வெற்றிகரமாக, செயல்படுத்தி முடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம், மூன்று வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களை உலகின் மற்றொரு வல்லரசு நாடான, ரஷ்யாவிற்கு அனுப்பி, அங்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

HOT NEWS