பால் தினகரனின் அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில், 200க்கும் அதிகமான வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இயேசு அழைக்கின்றார் என்ற அறக்கட்டளை மூலம் பல கிறிஸ்தவ மத போதனைகளை, பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருபவர் பால் தினகரன். இவருக்குச் சொந்தமாக காருண்யா பல்கலைக் கழகம் உட்பட, பலக் கல்வி நிறுவனங்களும் உள்ளன. இது தவிர, இவருடைய இயேசு அழைக்கின்றார் என்ற அறக்கட்டளையானது வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றது. இவருடைய அறக்கட்டளைக்கு, உலகின் பல நாடுகளில் இருந்தும் பண உதவிகள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றன.
இவர், அந்தப் பணத்திற்கு முறையானக் கணக்குக் காட்டவில்லை எனவும், வருமானத்திற்குரியக் கணக்கினை சரியாகக் காட்டவில்லை எனவும் பலப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பாரிமுனை, அடையாறு உட்பட 28க்கும் மேற்பட்ட, பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.