தற்கொலை செய்ய முயற்சித்தவர்களை அழைத்து கொலை செய்து வந்த ஜப்பான் இளைஞருக்கு, மரண தண்டனையானது விதிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் நாடு தான், உலகளவில் அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் தற்பொழுது பரபரப்பான வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளமான டிவிட்டரில், யாராவது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, ஜப்பானைச் சேர்ந்தவர்கள், கருத்துத் தெரிவித்தால், அவர்களுக்கு ஒருவர் தனியாக டிவிட்டரில் மெசேஜ் செய்வார். பின்னர், வாட்ஸ் ஆப்பில் பேச வேண்டும் என்றுக் கூறுவார்.
அவரிடம் இருந்து போன் வந்ததும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, தன்னுடைய வீட்டிற்கு வர வைத்துள்ளார். அவ்வாறு வந்த 9 நபர்களை, தலை, கால் முதலியவைகளை வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலை செய்யப்பட்ட நபர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி, அதனை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விடுவார். இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணின் டிவிட்டர் கணக்கினை, அப்பெண்ணின் உறவினர் சோதனை செய்துள்ளார்.
அதில், தற்கொலை செய்து கொள்ளப் போகின்றீர்களா, வாங்க இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொள்வோம் என்றுக் கூறி மெசேஜ் இருந்தது. பின்னர், வாட்ஸ் ஆப் நம்பர் கேட்டும் மெசேஜ் வந்திருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் உறவினர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், டோக்கியாவில் உள்ள சாமா எனும் இடத்தில் வசித்து வந்த 30 வயதுடைய தகாஹிரோ ஷிரைசி என்பவர் இவ்வாறு செய்வது உறுதியானது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், குற்றத்தினை அவர் ஒப்புக் கொண்டார். மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் தான், கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஜப்பான் நீதிமன்றமானது, மரண தண்டனை விதித்தது. இச்சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.