இனி இவர் தான் அமேசான் சிஈஓ! விடைபெற்றார் ஜெப் பிஸோஸ்!

03 February 2021 தொழில்நுட்பம்
jeff_bezos.jpg

அமேசான் நிறுவனத்தினை ஆரம்பித்து, அதன் முதன்மை அதிகாரியாக இருந்து வந்த ஜெப் பிஸோஸ் பதவி விலக உள்ளதாக, அறிவித்து உள்ளார்.

வெறும் ஒரு அறையில் ஆரம்பிக்கப்பட்ட அமேசான் நிறுவனமானது, தற்பொழுது உலகின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது. அதன் கிளைகள் பல நாடுகளில் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த அமேசானை ஆரம்பித்த ஜெப் பிஸோஸ் தான், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வருகின்றார். அவர் தலைமையில், இந்த நிறுவனமானது அசுர வளர்ச்சியினை அடைந்தது.

இந்த நிலையில், அமேசான் நிறுவனமானது, தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், இதுவரை சிஇஓவாக செயல்பட்டு வந்த ஜெப் பிஸோஸ், அந்தப் பதவியில் இருந்து விலக உள்ளார் எனத் தெரிவித்து உள்ளது. விண்வெளி துறை மற்றும் விண்வெளி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த உள்ளதால், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

அவருடைய இடத்தில் அவருக்குப் பதிலாக, ஆண்டி ஜாஸ்ஸே என்பவர் புதிய சிஇஓவாக பதவியேற்க உள்ளார். ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் படித்த இவர், அமேசானின் வெப் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்தார். தற்பொழுது அவர், முதன்மை அதிகாரியாக பதவியேற்க உள்ளார்.

HOT NEWS