உலகளவில் 397 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிய வானியல் நிகழ்வானது, தற்பொழுது நிகழ உள்ளது.
வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் மிகப் பெரிய கோள்களாகும். இரண்டும் பல மர்மங்களையும், அதிசயங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளன. இந்த கோள்கள் கடந்த 3 மாதங்களாக, புவியின் மேற்குத் திசையில் தொடர்ந்து காணும் விதத்தில் இருந்து வருகின்றன. இந்த இரண்டு கோள்களும் சூரியனைச் சுற்றி வந்தாலும், வியாழன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சனி 30 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சுற்றி வருகின்றன. இவை தற்பொழுது ஒன்றையொன்று நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விரண்டு கோள்களும் எப்பொழுதாவது ஒரே நேர்க்கோட்டில் புவியில் இருந்து பார்க்கும் பொழுது அமையும்.
அந்த நிகழ்வானது மிகவும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது. அதன்படி, இந்த ஆண்டு இந்த நிகழ்வானது நிகழ உள்ளது. வியாழன் மற்றும் சனி ஆகியவை வெவ்வேறு வேகங்களில் சுழன்று வருகின்றன. இவை இரண்டும் வரலாற்றுப் பதிவில் அதிக அளவில் நெருங்கி வந்துள்ளன. ஆனால், ஒரே நேர்க்கோட்டில் வருவது 60 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான். அதன் படி, கடந்த 1623ம் ஆண்டு, இவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் காட்சியளித்தன.
அதன் பின்னர், 2000ம் ஆண்டு மே 28ம் தேதி அன்று பகல் பொழுதில், ஒரே நேர்க்கோட்டில் காட்சித் தந்தன. இந்த நிகழ்வானது தற்பொழுது நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 21ம் தேதி அன்று தான், இந்த நிகழ்வானது முழுமையாக நிகழ உள்ளது. அப்பொழுது, இரண்டு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் நின்று, ஒரே கோளாக காட்சித் தர உள்ளன. அதனை நம்முடைய வெறும் கண்ணால் காண இயலும். இந்த நிகழ்வானது அடுத்த 2080ம் ஆண்டில் தான் நிகழ உள்ளது.