கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று! 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

21 December 2020 தொழில்நுட்பம்
virus.jpg

கேரளாவில் புதிதாகப் பரவி வருகின்ற சிகெல்லா பாக்டீரியாவின் காரணமாக, 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு கோடியினைத் தாண்டியுள்ளது. முதன் முதலாக இந்த வைரஸானது, கேரளாவில் காணப்பட்டது. இந்த வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த சூழலில், அம்மாந்திலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய நோய் தொற்று ஒன்று உருவாகி வருகின்றது. மனிதக் கழிவுகள் மற்றும் தண்ணீர் மூலம் இந்த புதிய நோய் தொற்றானது உருவாகி வருகின்றது.

இதற்கு சிகெல்லா எனப் பெயர் வைத்துள்ளனர். இது ஒரு பாக்டீரியத் தொற்றாகும். இதற்குத் தற்பொழுது வரை, சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டு, அங்குள்ள கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்தப் பாக்டீரியத் தொற்றானது, ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு கொரோனா போலப் பரவக் கூடியது. இந்தப் பாக்டீரியத் தொற்றிற்கு தற்பொழுது 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தற்பொழுது கேரள அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது.

HOT NEWS