கேரளாவின் பாலக்காடு பகுதியில், 6 வயது குழந்தையினை, அல்லாவிற்காக பலி கொடுத்த தாயினை, போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் புலக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஷாஹிதா. இவருடைய கணவர் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று, போலீசாருக்கு காலை 3 முதல் 4 மணியளவில் போன் வந்தது. அப்பொழுது நான் என்னுடைய 6 வயது மகனை, அல்லாவிற்கு தியாகம் செய்யும் நோக்கில் பலிகொடுத்து விட்டேன் எனக் கூறியுள்ளார் ஷாஹிதா. மேலும், நான் என் வீட்டின் வாசலில் தான் இருக்கின்றேன் எனவும் கூறியிருக்கின்றார்.
இதனைக் கேட்ட போலீசார், அவரை அவருடைய வீட்டிற்குச் சென்று கைது செய்தனர். அவருடைய கணவரும், இரண்டு குழந்தைகளும் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டு இருந்தனர். இளைய மகனின் கால்களைக் கட்டி பின்னர், கழுத்தினை அறுத்து ஷாஹிதா கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் பேசுகையில், அல்லாவிற்காக தியாகம் செய்யும் நோக்கத்தில் இவ்வாறான செயலில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்று, கூறியுள்ளனர். மேலும், இதன் உண்மையினைக் கண்டுபிடுக்கும் விதத்தில் விசாரணையானது நடைபெற்று வருகின்றது.