அதிகரித்த கிம்ம்மின் அட்டகாசம்! இருவருக்கு தூக்கு! மீன் பிடிக்க பொதுமக்களுக்கு தடை!

28 November 2020 அரசியல்
kimjongunse.jpg

கொரோனா தொற்றுப் பரவி விடக் கூடாது என்பதற்காக, வடகொரிய அதிபர் அந்நாட்டின் 2 பேருக்கு தூக்குத் தண்டனையினை நிறைவேற்றி உள்ளார்.

உலகளவில் பெரும்பாலான மர்மங்களை உள்ளடக்கிய நாடாக இருப்பது வட கொரியா தான். இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் கிம் ஜோங் உன். இவர் அந்நாட்டினை சர்வாதிகாரம் செய்து வருவதாக, உலக நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்றுக் கூறி வருகின்ற கிம், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக, பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில், வெளிநாட்டில் இருந்து பொருட்களை அத்துமீறி இறக்குமதி செய்ததற்காக ஒருவரை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதே போல், சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களை மீறியதாக மற்றொருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி உள்ளார். மேலும், வடகொரியாவினைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிக்கவும் தடை விதித்து உள்ளார்.

அந்நாட்டு மக்களின் பெருமளவிலான வருவாயினை, மீன் பிடித் தொழிலே தருகின்றது. அதற்குத் தற்பொழுது அவர் தடை விதித்து உள்ளார். ஏற்கனவே, வடகொரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில், இப்படியொரு தடையினை விதித்து உள்ளதால், பொதுமக்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

HOT NEWS