LIVE TELECAST திரைவிமர்சனம்!

13 February 2021 சினிமாo
livetelecastreview.jpg

வெங்கட் பிரபு இயகத்தில் ஹாட்ஸ்டாரில், LIVE TELECAST என்ற புத்தம் புதிய சீரிஸ் வெளியானது. இந்த சீரிஸிற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், யாரும் திரையறங்கிற்குச் செல்லவில்லை. அதே சமயம், திரையறங்குகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால், ஓடிடி பக்கம் பொதுமக்களின் கவனம் திரும்பியது. சூரரைபோற்று, க.பெ.ரணசிங்கம், மூக்குத்தி அம்மன், பெங்குயின், பொன்மகள் வந்தாள் உள்ளிட்டப் பலத் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. இந்த சூழலில், தமிழகத்தில் பல சீரிஸ்களும் வெளிவரத் துவங்கியுள்ளன. வெங்கட் பிரபுவும் தன்னுடைய LIVE TELECAST சீரிஸினை தற்பொழுது வெளியிட்டு உள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஹாரர் என்ற விதத்தில், இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 7 எபிசோட்களுடன் இது வெளியாகி உள்ளது. டார்க் டேல்ஸ் என்ற நிகழ்ச்சியினை இயக்கும் இயக்குநராக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அவருடைய படக் குழுவில், வைபவ், கயல் ஆனந்தி, டேனியல் உட்படப் பலரும் நடித்துள்ளனர். முதல் 3 எபிசோட்களும் ஜாலியாகவும் கமர்ஷியலாகவும் செல்கின்றது. பேய் கதைகளை மையப்படுத்தி, புதிய விதமாக சோக்களை எடுத்து, தான் வேலை செய்யும் நாம் டிவியில் ஒளிபரப்புகின்றார் காஜல்.

ஆனால், போகப் போக அதற்கு எதிர்ப்பு கிளம்ப, நேரடி ஒளிபரப்பு என்ற நிகழ்வினை எடுக்க முயற்சிக்கின்றார். அவருடையக் குழுவினரும் இணைந்து புதியதாக வீடு ஒன்றினைத் தேர்வு செய்கின்றனர். அந்த வீட்டில், ஏற்கனவே அமானுஷ்ய சக்தி இருக்கின்றது. அதனைக் கண்டறிந்து அந்த வீட்டிற்கு சென்று, நேரடியாக ஒளிபரப்ப முயற்சிக்கின்றார். ஆனால், அங்கு எதிர்பாராத விதமாக நடைபெறும் சம்பவங்கள் தான், LIVE TELECAST சீரிஸின் க்ளைமாக்ஸ்.

எப்படி டிவி சேனல்கள் டிஆர்பிக்காக நிகழ்ச்சிகளை எடுக்கின்றன. நம்முடைய நிகழ்ச்சி டிவியில் வர வேண்டும் என்றால், எவ்வாறு மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பது உட்பட, பல விஷயங்களை வெங்கட் பிரபு தோல்ரித்துக் காட்டியுள்ளார். படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இருப்பினும், சுமாரான இசை தான். படத்தில் அநாவசியமான ஆங்கில வசனங்கள், வார்த்தைகள் வருகின்றன. குறிப்பாக ஆபாசமான வார்த்தைகள், பெண்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகளும் அதிகளவில் வருகின்றன.

இந்த சீரிஸில் தன்னுடையக் கதாப்பாத்திரங்களை அனைவருமே சரியாக செய்துள்ளனர் என்றாலும், அணு குண்டு இருக்கும் என நினைத்தால், இந்த LIVE TELECAST சீரிஸோ புஸ்வானம் போல் முடிகின்றது. காஞ்சனா உள்ளிட்ட தரமான பேய் படங்களைப் பார்த்தவர்களின், எதிர்பார்ப்பினை முதல் 5 எபிசோட்கள் தாறுமாறாக ஏற்றிவிடுகின்றது. ஆனால், க்ளைமாக்ஸ் தான் சப்பென்று முடிவடைகின்றது. க்ளைமாக்ஸினை மட்டும் கவனித்திருந்தால், LIVE TELECAST வேற லெவல் தான்.

HOT NEWS