புதிய ஸ்டிரைக்கர் தேவை! மேன்செஸ்டர் யுனைடெட்! விரைவில் ஒப்பந்தம்!

30 September 2019 விளையாட்டு
ole.jpg

மென்செஸ்டர் யுனைடெட் புட்பால் கிளப்பினைத் தெரியாத, புட்பால் ரசிகர்கள் கிடையாது. அந்த அளவிற்கு அந்த அணி உலகப் புகழ் பெற்றது. அப்படிப்பட்ட அணி, தற்பொழுது மிக மோசமாக விளையாடி வருகின்றது.

கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக, மோசமாக இந்த அணி விளையாடி வருகின்றது. அந்த அணியின் பயிற்சியாளர்கள் மூன்று பேர் மாறிவிட்டனர். பல வீரர்களும் மாறிவிட்டனர். இருப்பினும், அணியின் வளர்ச்சியில் மாற்றமே இல்லை. பல சிறிய அணிகளும் ப்ரீமியர் லீக் கப்பினை வென்ற போதிலும், மென்செஸ்டர் அணியினால் வெல்ல இயலவில்லை.

தொடர்ந்து சொதப்பி வந்த அந்த அணியின் கோச்சாக, ஓலே நியமிக்கப்பட்டார். அவருக்கு கீழ் செயல்பட்ட அந்த அணி, கடந்த ஆண்டின் இறுதியில் சிறப்பாக விளையாடியது. இருப்பினும், இந்த ஆண்டு மீண்டும் சொதப்பலானத் தொடக்கத்தையே காட்டியுள்ளது. தற்பொழுது வரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில், 2 வெற்றி, 2தோல்வி மற்றும் 2 டிரா என 8 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது அந்த அணி.

அந்த அணி, சிறப்பான வீரர்களை மற்ற அணிகளில் இருந்து வாங்கி வந்தாலும், இந்த அணிக்கு வந்ததும், அந்த வீரர்களும் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக, அலெக்சிஸ் மற்றும் லுகாக்கூ என்ற வீரர்கள் படு மோசமாக விளையாடி வருவதால், அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதனை முன்னிட்டு, அந்த அணியின் கோச் புதிய ஸ்டிரைக்கரை வாங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், கண்டிப்பாக இந்த ஆண்டு புதிய ஸ்டிரைக்கரை வாங்கப் போவதாகவும், அவர் நல்ல விளையாடக் கூடியவராகவும் இருப்பார் எனவும் கூறியுள்ளார். எது எப்படியோ, அவரும் இங்கு வந்து, சொதப்பாமல் இருந்தால் சரி தான்.

HOT NEWS