மாஸ்டர் திரைவிமர்சனம்!

13 January 2021 சினிமா
masterreview.jpg

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தமிழகத்தின் 99% திரையறங்குகளில் இப்படமானது வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லலித் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசையானது கடந்த ஆண்டே வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது. இந்தப் படமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையறங்குகள் மூடப்பட்டது. இந்த சூழலில், இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக வெளியானது.இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜூன் தாஸ், மகேந்திரன், தீனா, கௌரி கிஷன், ரம்யா, பிரிஜிடா சகா, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என்றுப் பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து 2 ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், 3வது படத்தினையும் சிறப்பாக தந்துள்ளார். இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ள இரண்டு விஷயங்கள் என்னவென்றால், ஒன்று ஒளிப்பதிவு மற்றொன்று இசை.

இப்படத்திற்கு தெளிவான மற்றும் தரமான இசையினை அனிருத் கொடுத்துள்ளார். தன்னால் இந்தப் படத்திற்கு என்ன செய்து தர இயலுமோ, அதனை அவர் தெளிவாக செய்து கொடுத்து அசத்தியுள்ளார். படத்தின் நடனக் காட்சிகள் நன்றாகவும், ரொம்ப Fresh ஆகவும் உள்ளன. ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதத்தில் படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். சரி படத்தின் கதைக்குப் போவோம்.

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார் விஜய். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானவராக இவர் இருக்கின்றார். இருப்பினும், இவருக்கு அதிகளவில் குடிக்கும் பழக்கம் இருக்கின்றது. இந்தப் பழக்கமானது, உடன் பணிபுரியும் சக ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளாகின்றார். இதனை முன்னிட்டு, அவர் கல்லூரியில் இருந்து சிறுவர் சீர்திருத்தப் பளிக்கு ஆசிரியராக வேலைக்குச் செல்கின்றார். அங்கு அவர் எப்படிப்பட்ட சங்கடங்களை சந்திக்கின்றார், எவ்வாறு பிரச்சனைகளை தீர்க்கின்றார். எதிரிகளை வீழ்த்தினாரா, மாணவர்களுக்கு புதியதொரு மாற்றத்தினை உருவாக்கித் தந்தாரா என்பது தான் படத்தின் கதை.

படத்தில் அதிகளவில் குட்டிக் கதைகளை கூறுகின்றார். என்னடா அட்வைஸ் பண்ணுவாரோ என நினைக்க வேண்டாம். டைட்டானிக், பிரேமம், காதல் கோட்டை உள்ளிட்டப் படத்தின் கதைகளை தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததாகக் கூறி கைதட்டலை வாங்குகின்றார். இதில் அஜித்குமார் நடித்துள்ள காதல் கோட்டை படத்தின் கதையினைக் கூறும் பொழுது, திரையறங்கும் அதிரும் அளவிற்கு விசில் சப்தம் பறக்கின்றது. இப்படி படம் முழுக்க ஜாலியாகவும், எதிரிகளுடன் சண்டையிட்டு மாஸாகவும் வருகின்றார் விஜய்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் டி ராஜேந்தர் பாடலைப் பாடி விஜய் செய்யும் அட்டூழியத்தினை, அனைவரும் கை தட்டி ரசிக்கின்றனர். படத்தின் மிகப் பெரிய பலமாக இருப்பது வில்லனாக வருகின்ற விஜய் சேதுபதி. கொடூரமான பார்வை, அதிரடியான சண்டைகள், பேசுகின்ற பஞ்ச் வசனங்கள் அனைத்துமே அட்டகாசம் தான். எப்பொழுதும் விஜய் தான், I AM Waiting என்றுக் கூறுவார். ஆனால், இந்தப் படத்தில் விஜய்சேதுபதி கூறி அனைவரையும் அலற வைக்கின்றார்.

படத்தின் வேகம் நன்றாக இருந்தாலும், இன்னும் சுவாரஸ்யமாக செய்திருக்கலாமோ என நம்மை யோசிக்க வைக்கின்றார் இயக்குநர். படத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில், விஜய் கபடி விளையாடும் பொழுது, கில்லி Theme Music வருகின்றது. படத்தில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்ற போதிலும், படத்தினை மெர்சல், பிகில் போன்று பெரியதாக நம்மால் ஏற்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ரேட்டிங் 2.6/5

HOT NEWS