டிரம்ப் தோல்வி! விவகாரத்து செய்கின்றார் அவருடைய மனைவி மெலானியா டிரம்ப்!

09 November 2020 அரசியல்
melaniatrump11.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் விவாகரத்து பெற உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், ரிபப்பிளிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் தோல்வியினைத் தழுவினர். அவர்களை டெமோக்ராடிக் கட்சியின் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோர் வென்று உள்ளனர். இதனால், அவர்கள் முறையே அதிபராகவும், துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதனால், விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையினை விட்டு வெளியேறுவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தோல்வியினை தற்பொழுது வரை ட்ரம்ப் ஏற்கவில்லை. நீதிமன்றத்தில், ஜோ பிடன் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள் எனவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில், ட்ரம்ப் வெள்ளை மாளிகையினை விட்டு வெளியேறியதும், அவரை அவருடைய மனைவி மெலானியா ட்ரம்ப் விவாகரத்து செய்ய உள்ளதாக, வெள்ளை மாளிகையின் உதவியாளர்களுள் ஒருவரான ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறியுள்ளார். அவர் பேசுகையில், தற்பொழுது ட்ரம்பிற்கும், மெலானியாவிற்கும் பிறந்த போரானுக்கு சொத்தில் சம பங்கு வழங்குவது குறித்து விவாதித்து வருகின்றார் எனக் கூறியுள்ளார்.

ட்ரம்பிற்கும், மெலானியா ட்ரம்பிற்கும் திருமணம் நடைபெற்று 15 வருடங்கள் ஆகின்றன. இருவருக்கும் சுமார் 25 வருடங்கள் வித்தியாசம் உள்ளன. தற்பொழுது அவர் வெள்ளை மாளிகையினை விட்டு, ட்ரம்ப் வெளியேறுவதற்காக மெலானியா காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, இன்னும் வெளியாகவில்லை.

HOT NEWS