இன்று சென்னை YMCA மைதானத்தில், திமுக கட்சியானது, புதிய உலக சாதனையினை படைத்துள்ளது.
திமுக தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்காக புதிய புதிய உத்திகளை திமுக தலைவர் முகஸ்டாலின் தலைமையில், அக்கட்சியானது கையாண்டு வருகின்றது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்றப் பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற முகஸ்டாலின், ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைகளை எழுதி போடுவதற்கான பெட்டியினையும் அறிமுகம் செய்து வைத்து வருகின்றார்.
இந்த சூழலில், இன்று புதிய உலக சாதனை ஒன்றினையும் அவருடையத் தலைமையில், திமுக கட்சியானது செய்துள்ளது. இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடிய திமுகவினைச் சேர்ந்த 6,000 இளைஞர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தினை போல நின்றனர். இது தற்பொழுது உலக சாதனையாக மாறியுள்ளது. இதற்கான விருதினை, இப்போட்டியினை சோதனை செய்தவர்கள், முக ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.