லாக்டவுன் காலத்திலும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 90 கோடி அளவிற்கு வருமானம் பார்த்துள்ளார் முகேஷ் அம்பானி.
இந்தியாவின் நம்பவர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. அவர் உலகின் டாப் பணக்காரர்களுள் ஒருவராகவும் இருந்து வருகின்றார். அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமோ, இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது, நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய அளவிலான லாக்டவுனானது இந்தியா முழுவதும் அமலில் உள்ளது.
இந்தக் காலக் கட்டத்தில் தான், முகேஷ் அம்பானி உலகின் 4வது மிகப் பெரிய பணக்காரராக மாறியிருந்தார். இந்த அசுர வேகத்தினை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஏழை, எளிய மக்கள் அடுத்த வேளை உணவிற்கே கஷ்டப்பட்டு வந்த வேலையில், இவருடைய சொத்து மதிப்பானது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே இருந்து வந்தன. இதனை பல நிறுவனங்கள் மதிப்பீடு செய்தும், ஆய்வு செய்தும் வந்தன. அதனடிப்படையில் பார்க்கும் பொழுது, இவர் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 90 கோடி ரூபாயினை சம்பாதித்து உள்ளார்.
இதனை இந்தியாவில் யாரும் சம்பாதித்ததே இல்லை. லாக்டவுன் சமயத்தில் நடுத்தர மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கார்ப்பரேட் முதலிலாளிகள் நல்லதொரு வருமானத்தினை, இந்த லாக்டவுன் சமயத்திலும் பார்த்துள்ளனர். ஆனால், பல கோடி நபர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வேலை இழந்துள்ளனர். இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 35% கூடுதலாக அதிகரித்துள்ளது.
உலகளவில் பார்க்கையில், இந்தியாவின் மதிப்பானது பொருளாதார அடிப்படையில் ஆறாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது ஊரடங்கு சமயத்தில் மட்டும், 24% கூடுதலாக அதிகரித்து உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.