முத்தூட் கொள்ளையர்கள் கைது! தமிழக போலீசார் அதிரடி! ஒரே நாளில் பிடித்தனர்!

23 January 2021 அரசியல்
maskedpeople.jpg

18 மணி நேரத்திலேயே, ஓசூர் முத்தூட் பைனானல்சில் கொள்ளையடித்தவர்களை, தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நேற்று ஓசூர் சேலம் சாலையில் அமைந்துள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, சுமார் 12 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், பணத்தினையும் 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. சிசிடிவி கேமிராவினை ஆய்வு செய்த போலீசார், வட மாநிலத்தினைச் சேர்ந்த கொள்ளையர்கள், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.

அதனை முன்னிட்டு, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியானது பெங்களூரு வரை விரிவாக்கப்பட்டது. இவர்கள் பெங்களூருவில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என்பதால், அங்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அவர்களுடைய சந்தேகப்பட்டதைப் போல, ஆறு கொள்ளையர்களையும் ஐதராபாத் நகரில் கைது செய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகளையும், பணத்தினையும் மீட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். திருடர்களை ஒரே நாளுக்குள் பிடித்த போலீசாருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS