150 ஆண்டுகளாக பிரபஞ்சத்தில் நடைபெற்று வருகின்ற பெரு வெடிப்பு ஒன்றினை புகைப்படத்தினை, நாசா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
புவியில் இருந்து 7500 ஒளி ஆண்டுகளுக்குத் தொலைவில் ஈட்டா காரினே என்றப் பெயரில் புதிய வெடிப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது. இதனை, ஸ்லோமோசன் பட்டாசு வெடிப்பு என, நாசா கூறியுள்ளது. இந்த பெரு வெடிப்பானது, நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் புகைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.
பிரபஞ்சத்தில் பெரு வெடிப்பு என்பது சாதாரண நிகழ்வாகும். நட்சத்திரங்கள் அழிவதும், அது உடைந்து பெரு வெடிப்பு நிகழ்வதும் எப்பொழுதும் நடைபெறக் கூடிய ஒன்று தான். இதனை ஒரு மனிதரால் முழுமையாகப் பார்த்து முடிக்க இயலாது. அந்த அளவிற்கு இந்த வெடிப்பானது, பல நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடக்கும். அப்படி நடக்கும் ஒரு நட்சத்திரத்தின் புகைப்படத்தின் வெடிப்பினை தான் நாசாவும் வெளியிட்டு உள்ளது.