செவ்வாயில் ஆய்வு செய்த வந்த நாசா ரோவர் செயலிழந்தது! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

15 January 2021 தொழில்நுட்பம்
nasamarsrover.jpg

செவ்வாயின் மேற்பரப்பினை ஆய்வு செய்வதற்காக, நாசா அனுப்பியிருந்த ரோவரானது, தற்பொழுது செயலிழந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாயினை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா அமைப்பானது, கடந்த 2018ம் ஆண்டு அனுப்பிய விண்கலமானது, தன்னுடைய இன்சைட் ரோவரினை வெற்றிகரமாக செவ்வாயின் மேற்பரப்பில் நிலை நிறுத்தியது. இந்த ரோவரில், இருந்த ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த 40 செ.மீ நீளமுள்ள குழி தோண்டும் கூர்முனைக் கருவியும் தரையிறங்கியது.

இது தொடர்ந்து, 16 அடி குழித் தோண்டி. அந்த குழியின் மூலம் ஹீட் சென்சார் கருவியானது தரையில் உள்ள வெப்பத்தினை அளவிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்பது தான் திட்டமே. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது அந்த ரோவரானது 16 அடி தோண்டுவதற்கு முன்பே, அந்த கருவியானது செயலிழந்து உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது. இதனால், பல கோடி மதிப்புள்ள அந்த திட்டமானது தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது.

HOT NEWS