அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, இந்தியாவின் பொருளாதாரமானது சீராக ஆரம்பிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதாரமானது, கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருவதாகப் பலரும் புகார் தெரிவித்தனர். இதனை மத்திய அரசு முற்றிலும் மறுத்து வந்தது. கடந்த ஆண்டு, வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய நிறுவனங்களில் இருந்து ஆட்களைக் குறைக்க ஆரம்பித்தனர். இருப்பினும், நிதியமைச்சகம் நடத்தியப் பேச்சுவார்த்தையின் காரணமாக, பிரச்சனைகள் இல்லாமல் வாகன உற்பத்தித் துறையானது செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில், இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்தியாவின் பொருளாதாரமானது, மைனஸில் சென்று கொண்டிருந்தது. இதற்கு பலரும் தங்களுடைய எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மத்திய அரசின் புதியத் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனிடையே, தற்பொழுது இந்தியப் பொருளாதாரம் சற்று வளர்ச்சியடைய ஆரம்பித்து உள்ளது.
இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதாரமானது, வருகின்ற நிதியாண்டில் நல்லதொரு வளர்ச்சியினை அடையும் எனவும், தனியார் நிறுவனங்கள் வருகின்ற ஆண்டில் வேகமான வளர்ச்சியினை அடையும் எனவும் கூறியுள்ளார். வங்கிகள் தற்பொழுது தாராளமாக நிதியுதவி வழங்குவதால், விரைவில் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சனைகளும் தீரும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளார்.